வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து ஈரற்பெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வாகனத்தின் சாரதி சிறுகாயங்களிற்குள்ளாகினார்.
விபத்து தொடர்பில் ஈரற்பெரியகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments