கந்தளாயில் மாடொன்றைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் கொன்ஸ்டபிள் கடந்த 20 ஆம் திகதி சுமார் 1,50,000 ரூபாய் பெறுமதியான மாடொன்றைத் திருடியமைக்காகக் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவர் பிணையில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையிலேயே நேற்றைய தினம் அவரை திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உடனடியாக பணியில் இருந்து இடைநிறுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments