அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பொதுஜன பெரமுனவிற்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நீண்ட காலமாக உள்ளவர்.
மாகாணசபைகளின் முதல்வர்களை அமைச்சரவைக்குள் அழைத்து பேச்சு நடத்தியவர் தான் மஹிந்த ராஜபக்ஷ. அத்தோடு, 13 பிளஸ் தருவதாக அப்போதே அவர் கூறியிருந்தார்.
எனவே, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பொதுஜன பெரமுனவிற்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது.
சர்வக்கட்சி மாநாட்டின்போது, நாம் இந்த நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைப்போம்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments