Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச தினக் கொண்டாட்டம்.


நிரல் கல்வி அமைச்சின் வழிகாட்டலுக்கமைவாக சுதுமலை சிம்மிய பாரதி வித்தியாலயத்தில் எதிர் காலத்திற்கான சுற்றுச் சூழல் கழக அனுசரணையுடன் ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு நிகழ்வுகள் இன்றைய தினம்  திங்கட்கிழமை நடைபெற்றது. 

ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச தினம்  செப்டம்பர் 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, இது 1987 ஆம் ஆண்டு சுற்றுச்சூழலுக்கான மாண்ட்ரீல் நெறிமுறையில் உலக நாடுகள் கையெழுத்திட்டதை மையமாகக் கொண்டு செயற்படுத்தப்படும் தினமாகும்.  

பூமியின் வளிமண்டலத்திலுள்ள வாயுவின் மெல்லிய படை அடுக்கான ஓசோன் அடுக்கை பாதுகாப்பது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது சர்வதேசரீதியில் கொண்டாடப்படுகிறது.

அதனை முன்னிட்டு, சுதுமலை சிம்மிய பாரதி வித்தியாலயத்தில் மாணவர் மத்தியில் ஓசோன்படலத்தை பாதுகாப்பது தொடர்பான பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இதில் வெற்றியீட்டிய மாணவருக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை வழங்கப்பட்டன.  

பாடசாலை முதல்வர் துரைரட்ணம் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக புவியில்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.நாகமுத்து பிரதீபராஜா கலந்து சிறப்பித்தார். 

இத்துடன் விருந்தினர்களாக வலிகாமம் கல்வி வலய சுற்றாடல் முன்னோடி வலய ஆணையாளர் ப.அருந்தவம், எதிர்காலத்திற்கான சுற்றுச்சூழல் கழக தலைவர் மற்றும் செயலாளர்களாகிய லி.கேதீஸ்வரன், ம.சசிகரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.









No comments