Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் , சார்ள்ஸ் உள்ளிட்டோருக்கு பிடியாணை


நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் சுதந்திர தினத்தன்று , யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கரிநாள் பேரணியில் கலந்து கொண்டு , அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , சார்ள்ஸ் நிர்மலநாதன் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ்.நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குறித்த வழக்கில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 

அந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வழக்கு நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது , மன்றில் சமூகமளிக்காத செல்வம் அடைக்கலநாதன் , சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு மன்று பிடியாணை பிறப்பித்தது. 

No comments