கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதியில் உள்ள வீதியின் நாற்சந்தியில் இளைஞனின் சடலம் ஒன்று இன்றைய தினம் அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
கோணாவில் பகுதியை சேர்ந்த புஸ்பராஜா தினேஷ்கரன் (வயது 30) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோணாவில் பகுதியில் வைத்து , இளைஞனை கடத்தி , தாக்கி படுகொலை செய்த பின்னர் ஊற்றுப்புலம் சந்தியில் சடலத்தை வீசி விட்டு சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments