திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு பொலிஸார் நீதிமன்று ஊடாக தடை பெற்ற நிலையில் தியாக தீபத்தின் உருவப்படம் இன்றி குதிரைக்கு மலர் மாலை அணிவித்து , சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்
திருகோணமலை நீதவான் நீதிமன்றில் , நினைவேந்தலுக்கு தடை கோரி பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை அடுத்து , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்று நினைவேந்தலுக்கு தடை விதித்து கட்டளை பிறப்பித்தது.
அந்நிலையில் குளக்கோட்டன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வின் போது , தியாக தீபத்தின் உருவப்படம் இன்றி , கதிரையில் தியாக தீபம் அமர்ந்து இருப்பதாக ஆத்மார்த்த ரீதியாக நினைத்து கதிரைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் பொலிஸார் தடை கட்டளையுடன் நின்றிருந்த போதும் , அஞ்சலி நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
No comments