கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி, இன்றைய தினம் திங்கட்கிழமை பயணித்த பஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வரக்காபொல மற்றும் வதுப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
No comments