யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் வைத்து , கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞன் பொலிஸாரினால் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டுக்கு விரைந்த பொலிஸார் போதை வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து ஒரு தொகை போதைப்பொருளை மீட்டு உள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments