இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன ஆகியோர் உபாதைக்கு உள்ளாகியுள்ளனர்.
அதன் காரணமாக எதிருவரும் திங்கட்கிழமை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தசுன் ஷானக விளையாடமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அந்த போட்டியில் மதிஷ பத்திரனவும் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.
உபாதை காரணமாக லக்னோவில் இன்று நடைபெற்ற பயிற்சியிலும் தசுன் ஷானக மற்றும் மதீஷாவும் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உபாதை காரணமாக தசுன் ஷானகவால் மூன்று வாரங்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments