மேஷம்
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப பலன் கிட்டும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.
ரிஷபம்
இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை தரும். பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மிதுனம்
இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 10.28 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு பகல் 10.28 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு அமையும்.
தனுசு
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். வருமானம் பெருகும்.
மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
கும்பம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். தெய்வ வழிபாடு நல்லது.
மீனம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
No comments