யாழ் ஊடக அமைய பொதுக்கூட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றபோதே புதிய ஆண்டுக்கான நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
தலைவர் உரை,செயலாளர் உரை,
பொருளாளர் கணக்கறிக்கை வாசித்தல் என்பன இடம்பெற்று புதிய நிர்வாக தெரிவு
யாழ் ஊடக அமைய உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இதன்போது யாழ் ஊடக அமையத்தின் புதிய தலைவராக மூத்த பத்திரிகையாளர் குமாரசாமி செல்வகுமார் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.
செயலாளராக சி.நிதர்சனும் பொருளாளராக க.கம்சனனும் தெரிவு செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, உப தலைவர் , உப செயலாளர் தெரிவை அடுத்து நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
யாழ். ஊடக அமையமானது, 10 ஆண்டுகளை கடந்து 11ஆவது ஆண்டில் கால் பதிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
No comments