Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

யாழ்.சந்தைகளில் 10 வீத கழிவு பெற தடை - மீறுபவர்களை கைது செய்யவும் உத்தரவு


யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு நடைமுறையினை உடனடியாக நிறுத்தி குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் வைத்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து 10 வீத கழிவு அறவிடும் நடைமுறை செயற்படுத்தப்படுகின்றது .

குறிப்பாக திருநெல்வேலி, மருதனார்மடம், சாவகச்சேரி, கொடிகாமம் சந்தைகளில் விவசாயிகளிடம் கழிவு அறவிடும் நடைமுறை இடம்பெற்று வருகின்றது. 

குறித்த சந்தைகளில் விவசாயிகள் அச்சுறுத்தப்பட்டு அவர்களிடம் இந்த கழிவு அறவிடப்படுகின்றது. எனவே விவசாயிகள் இது தொடர்பில் முறைப்பாட்டினை பதிவு செய்வதில் தயக்கம் காட்டுவார்கள். எனவே பொதுவான தீர்மானமாக பொதுவான முறைப்பாடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து பொலிசார் இதனை தடுத்த நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார். 

அத்துடன் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

குறித்த சம்பவத்தினை பொலிசாரால் மாத்திரம் தடுத்து நிறுத்த முடியாது. இதற்கு பிரதேச செயலர்கள்,கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் கழிவு நடைமுறை தொடர்பிலான சகல தகவல்களையும் பொலிசாருக்கு வழங்கினால் பொலிசாரினால் அதனை கட்டுப்படுத்தி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு இலகுவாக இருக்கும் எனவும் வடக்கு ஆளுநர் தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் காலங்களில் பிரதேச சபைகள் சந்தைகளை குத்தகைக்கு கொடுக்கும்போது இந்த கழிவு நடைமுறை அமுல்படுத்த கூடாது என்ற நிபந்தனையும் பின்பற்றிய வழங்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

No comments