தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் , தமிழகம் செல்ல உண்டியல் குலுக்கி பணம் சேகரித்து வருகின்றனர்.
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை இங்குள்ள அதிகாரிகளோ , அரசியல்வாதிகளோ தடுத்து நிறுத்த காத்திரமான நடவடிக்கைகளை இதுவரையில் எடுக்கவில்லை எனவும், அதனால் தாமே தமிழகம் சென்று , தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , தமிழக அரசியல்வாதிகள் மற்றும் தமிழக கடற்தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் சென்று பேச்சு நடத்த யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதனால் தமிழகம் செல்வதற்கான நிதி திரட்டும் நடவடிக்கையாக உண்டியல் குலுக்கி நிதி சேகரித்து வருகின்றனர்.
இதில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார், மாரீசன்கூடல் குசுமாந்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், வலி. தென்மேற்கு கடற்றொழில் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ், மாதகல் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
No comments