யாழ்ப்பாணம் - குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று அங்குள்ள பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு பயணத்தை மேற்கொள்ளும் படகுகளுக்கு இறங்கு துறையில் இடங்கள் ஒதுக்கப்படாததால் , படகுகளை கரை சேர்ப்பதற்கும் , தரித்து நின்று பயணிகளை ஏற்றுவதிலும் இடர்களை எதிர்கொண்டு வருவதாக படகு உரிமையர்கள் மற்றும் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அதன் போது இணைத்தலைவர்களில் ஒருவரான கடற்தொழில் அமைச்சர் தான் நேரில் வந்து அது தொடர்பில் ஆராய்வதாக கூறி இருந்தார்.
அந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு நேரில் சென்ற அமைச்சர் நெடுந்தீவு மற்றும் நயினாதீவு இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் படகு உரிமையாளர்கள் , கடற்படையினர் மற்றும் துறை சார் அதிகாரிகளை குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு நேரில் அழைத்து எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பில் பேசப்பட்டது.
படகுகளுக்கு இறங்குதுறையில் இடம் ஒதுக்குதல் , தரித்து நிற்கும் நேரம் , சேவையில் ஈடுபடுவதற்கான நேர அட்டவணை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
No comments