யாழ்ப்பாணம் தென்மராட்சி கல்வி வலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வு கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் க.மகேசனும், சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி நிர்வாக மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி பிரதீபா காயத்திரி கஜபதியும் கலந்து கொண்டனர்.
மேலும், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் ஓய்வு நிலை அதிபர்கள் , ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றன.
அத்ததுடன் ஓய்வு நிலை அதிபர் ஆசிரியர்கள் மாலை அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
No comments