Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.துன்னாலையில் முன் பகை காரணமாக வாள் வெட்டு - இளைஞன் படுகாயம்


துன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துன்னாலை கிழக்குப் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை சுஜீதரன் (வயது-31) என்ற இளைஞரே வாள் வெட்டு காயங்களிற்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

முன்பகை காரணமாகவே இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தமது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்த நெல்லியடிப் பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments