சனீஸ்வரன் ஆலயம் திருகோணமலை நகரத்தின் மடத்தடி என்றழைக்கப்படும் பிரதேசத்தில் ஸ்ரீ கிருஸ்ணண் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது.
வழமையாக ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விசேட வழிபாடு நடைபெறும். இவ்வாலயத்தில் புரட்டாதி மாதத்தில் பெருந்திரளான பக்தர்களுடன் புரட்டாதிச் சனீஸ்வர விரதம் சிறப்பாக அனுஸ்டிக்கப்படும்.
உலகில் சனீஸ்வரனுக்குத் தனியாக அமைக்கப்பட்டிருக்கும் ஆலயம் இதுவொன்றுதான்.
இந்தியாவில் சனீஸ்வரனை பிரத்தியோகமாக வழிபடும் தலம் திருநள்ளாறு. நளன் சனிபகவானிடமிருந்து விடுபட்ட இடமாக கருதப்படும் இங்கு சிவாலயத்தில் சனீஸ்வரனுக்குத் தனியான சன்னிதி உண்டு.
ஆனால் திருகோணமலையில் தான் சனீஸ்வரனுக்கு தனியான ஆலயம் உண்டு.
No comments