யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான இன்று, மாலை வசந்தமண்டப பூஜை நடைபெற்று, வள்ளி, தேவசேனா சமேதராக கைலாச வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி, ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை எரிக்கப்பட்டது.
தொடர்ந்து நல்லூர் முருகப் பெருமான் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
No comments