தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து நடாத்திய வடமாகணத்தின் 7வது பட்டமளிப்பு விழா யாழ். சாவகச்சேரி "பூமாரி மண்டபத்தில்" நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.
இந்த நிகழ்வில், யாழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை முன்னாள் தலைவரும், இந்து நாகரிகத்துறை பேராசிரியருமான கலாநிதி விக்னேஸ்ரி பவநேசன், தமிழ் இணையக் கல்விக்கழக வடக்கு மற்றும் மத்திய மாகாண இணைப்பாளரும், சிந்து அக்கடமியின் இயக்குநருமான இ. கோபிகிருஷ்ணா, பாரதி இன்ஸ்ரிரியூட் இயக்குநரும், முதன்மை விரிவுரையாளரும், தமிழ் இணையக் கல்விக்கழக வடமாகாண இணைப்பாளருமான க. ரஜனிகாந்தன், தமிழ் இணைய கல்விக்கழக யாழ்.வளாக விரிவுரையாளர்களான சி இளந்திரையன், க.முருகதாஸ் மற்றும் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டு பட்டம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
இதன்போது தமிழில் சிறப்பு பட்டத்தை 89 மாணவர்களும், மேற்பட்டயச் சான்றிதழ்களை 88 மாணவர்களும், பட்டய சான்றிதழ்களை 52 மாணவர்களும் பெற்றனர்.
No comments