Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

துப்பறியும் சாம்புவும், செயற்கை நுண்ணறிவும்


சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் துரைராசா அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு இணையவழியிலான அறிவியல் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. 

குறித்த கருத்தாடலானது பாடசாலை மாணவர்களை அறிவியல் ரீதியான சிந்திக்க, செயற்பட ஊக்குவிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

 "துப்பறியும் சாம்புவும், செயற்கை நுண்ணறிவும்" எனும் தலைப்பில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு, இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் அதிதிப் பேச்சாளராக மொறட்டுவைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்  கலாநிதி உதயசங்கர் தயாசிவம் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.

மேலும் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் தொடர்பிலான முன்னுதாரணக் குறிப்பினை பேராதனைப் பல்கலைக்கழக பேராசியர் கலாநிதி நவரட்ணராஜா அவர்கள் மேற்கொள்ளவுள்ளார்.

  Zoom Meeting ID: 675 0395 0277 , Passcode: 23@Sirakukal எனும் சூம் செயலி இணைப்பு ஊடாக நிகழ்வில் கலந்துகொள்ள முடியும் என அறிவித்துள்ளனர் 

இளம் தலைமுறையினருக்கு சிறந்த முன்னுதாரணங்களை எடுத்துக்காட்டும் வகையில் பேராசிரியர் துரைராசா அவர்களின் பிறந்த தினத்தில் இந்த செயற்பாடு சிறகுகள் அமையம் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments