யாழ்ப்பாணம் - கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலய மாணவர்களின் "மாணவர் சந்தை" நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஒன்றான மாணவர் சந்தை ஆரம்பப்பிரிவு மாணவர்களினால் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டது.
பாடசாலை அதிபர் ஜெ.ரஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ் வலயக் கல்விப் பணிமனையின் உதவி கல்வி பணிப்பாளர் ப.சுரேந்திரனும், சிறப்பு விருந்தினராக J/126 கிராம அலுவலரான திருமதி.ம.சுரேஷ்கண்ணாவும் கலந்து கொண்டு மாணவ சந்தையை ஆரம்பித்து வைத்தனர்.
No comments