Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சர்வதேச ரீதியில் சாதனைகளை படைக்கும் முல்லைத்தீவு பெண் - காணொளி இணைப்பு


பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட  முல்லைத்தீவு , முள்ளியவளை பகுதியை சேர்ந்த திருமதி. அகிலத்திருநாயகி தனது 75 வயதிலும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களைப் பெற்றுள்ளார்.  

அவர், 1500m ஓட்டம் மற்றும் 5000m விரைவு நடை ஆகிய இரு போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை பெற்றதுடன் , 800m  ஓட்டம் போட்டியில் வெங்கலப் பதக்கத்தினை பெற்றுக்கொண்டார். 

அதேவேளை 5000m ஓட்டம் போட்டியில் நான்காம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளார். 

கடந்த காலங்களிலும் இலங்கை மாத்திரமின்றி சர்வதேச ரீதியில் சர்வதேச நாடுகளில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 





No comments