ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டதையடுத்து வெற்றிடமாகிய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் பதவிக்கு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சற்று முன்னர் இவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று பதவி நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments