யாழ்ப்பாணம் மருதங்கேணி பகுதியில் அமைந்துள்ள மதுபான சாலையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருதங்கேணி சந்திக்கு அண்மித்த பகுதியில் புதிதாக மதுபான சாலை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதற்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
மதுபான சாலை பிரதான வீதி சந்திக்கு அருகில் உள்ளதாகவும், அதனை சூழவுள்ள பகுதிகளில் நெருக்கமான மக்கள் குடியிருப்புக்கள் , ஆலயங்கள் பாடசாலைகள் உள்ளன உள்ள நிலையில் மதுபான சாலையை அங்கிருந்து அகற்றுமாறு மக்கள் கோரி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டதை அடுத்து , தற்போது உள்ள இடத்தில் இருந்து மதுபான சாலையை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இன்னமும் அதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் , தொடர்ந்து அந்த இடத்திலையே மதுபான சாலை இயங்குவதால் , அதனை அவ்விடத்தில் இருந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்
No comments