கடந்த 10 மாதங்களில் 20க்கும் மேற்பட்டோர் பொலிஸ் காவலில் உயிரிழந்துள்ளனர் என இலங்கை மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தாம் தயாரித்துள்ளோம்.
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 11 ஆம் திகதி வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்.
பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் மரணங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
No comments