வயற்காணி தொடர்பிலான பிரச்சனை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை, பண்டாரதூவ, மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலையே 2 பிள்ளைகளின் தந்தையான 42 வயதான குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
இவர், தனது வீட்டில் வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்த போது, உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்/
No comments