அச்சுவேலி தெற்கு கிராம அலுவலர் க.அனுஜன் அவர்களிற்கு செம்புல இளங்குருசில் விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கு பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட திரு கதிர்காமநாதன் அனுஜன் 1990 ஆம் ஆண்டில் பிறந்தார்.
யாழ் பரி யோவான் கல்லூரியின் பழைய மாணவரான இவர் பாடசாலை காலத்தில் பல்வேறுபட்ட போட்டிகளில் பங்குபற்றி பல சான்றிதழ்களையும் பரிசில்களையும் பெற்றுக் கொண்டவர்.
கட்டுரை, கவிதை, வில்லிசை ,நாடகம், அறிவிப்பு ,போன்ற துறைகளில் பிரகாசித்துக் கொண்ட கதிர்காமநாதன் அனுஜன் அவர்களிற்கு நேற்றைய தினம் புதன்கிழமை அமரர் கதிரவேலு கேதீஸ்வரன் அரங்கில் நடைபெற்ற வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தின் பண்பாட்டுப் பெருவிழாவில், வலிகாமம் கிழக்கு பண்பாட்டுப் பேரவையினரால் 2023 ம் ஆண்டின் "அறிவிப்பாளர்" கலைக்கான "செம்புல இளங்குரிசில்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவ்விருதினை இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட செயலர்அம்பலவாணர் சிவபாலசுந்தரன் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர், கோப்பாய் பிரதேச செயலாளர், பதவி நிலை உத்தியோகத்தர்கள் பிரதேசத்தின் மூத்த,இளங்கலைஞர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments