Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் அனுமதியின்றி நடந்த DJ night


யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் பொலிசாரின் அனுமதியின்றி யாழ்.நகரை அண்டிய பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் இரவு இசை விருந்து (DJ Night) நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்டுள்ளது. 

தனியார்  நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் , ஒருவருக்கு உணவுடனான நுழைவு சீட்டு 3ஆயிரம் ரூபாய்க்கும் , சாதாரண நுழைவு சீட்டு 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு இரவு இசை விருந்து நடத்தப்பட்டுள்ளது. 

கோளிகை நிகழ்வுகளுக்கு , நுழைவு சீட்டு விற்பனை செய்வதாயின் மாநகர சபையின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பதுடன் ,நுழைவு சீட்டின் பெறுமதியில் குறிப்பிட்ட வீதம் மாநகர சபைக்கு வரியாக செலுத்தப்பட வேண்டும். ஆனால் வரி ஏய்ப்பு செய்யும் முகமாகவும் எவ்வித  அனுமதிகளும் இன்றி நிகழ்வு நடப்பட்டுள்ளது.

நிகழ்வில் மது மற்றும் போதை பொருள் பாவனைகள் காணப்பட்டதாகவும் , கைக்கலப்புக்களும் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கபப்டுகிறது  

அதேவேளை கடந்த நவம்பர் மாதம் 04ஆம் திகதி குறித்த ஹோட்டலில் நடைபெற்ற இவ்வாறான ஒரு இரவு இசைவிருந்தில் மது மற்றும் போதை விருந்தும் இடம்பெற்ற நிலையில் நிலையில் , மாநகர சபை , பொலிஸார் மற்றும் ஹோட்டல் நிர்வாகத்தினர் அனுமதி வழங்கியமை தொடர்பில் கடும் விசனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்றைய நிகழ்வுக்கு மாநகர சபை மற்றும் பொலிஸார் அனுமதி வழங்க மறுத்து இருந்தனர். 

இந்நிலையில் மாநகர சபை மற்றும் பொலிசாரின் அனுமதி இன்றி இரவு இசை விருந்து நடாத்துவதற்கு ஹோட்டல் நிர்வாகம் அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 

No comments