கடந்த ஒக்டோபர் மாதம் காணாமல் போன இரண்டு பெண்கள் மாத்தறை பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கலகெதர மற்றும் மாவத்தகம பிரதேசத்தில் வசித்து வந்த 18 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு இளம் பெண்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் வீட்டில் இருந்து மாயமானதாக தகவல் வெளியானது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸ் நிலையங்கள் குறித்த பெண்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த நடவடிக்கையின் போது இவர்கள் மாத்தறை உயன்வத்தை பிரதேசத்தில் வாடகை அறையில் தங்கி கடை ஒன்றில் வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய மாத்தறை பொலிஸார் இரு பெண்களையும் இன்று (25) கைது செய்துள்ளனர்.
குறித்த இரு பெண்களின் பெற்றோரையும் மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
No comments