மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு சான்று பொருட்கள் அறையில் ஹெரோயின் மற்றும் துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற வழக்கு சான்று பொருள் அறையில் இருந்து, ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள், T56 ரக துப்பாக்கி மற்றும் ரிவால்வர் ரக துப்பாக்கியை இந்த சந்தேக நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
ரிவோல்வர் ரக துப்பாக்கி 280,000 ரூபாவுக்கு வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை சந்தேகநபர்களால் திருடப்பட்ட T56 ரக துப்பாக்கியானது, டிக்வெல்ல பொலிஸ் பிரிவில் மனிதனைக் கொலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கியும் சந்தேகநபர்களால் 250,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், இதனை வாங்கிய நபரை கண்டறிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
No comments