Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

காய்ச்சல் இரண்டு நாளைக்கு மேல் நீடித்தால் மருத்துவ ஆலோசனை பெறவும் - யாழில் உண்ணிக்காய்ச்சலும் பரவிடுகிறது


காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி ஏற்பட்டால் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளருமான வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தினசரி நூற்றுக்கணக்கானோர் டெங்கு நோய்க்கான சிகிச்சையை பெற்று வருகின்றனர். 

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை தவிர, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைகளிலும் டெங்கு நோயாளிகளை பராமரிக்க விடுதிகள் காணப்படுகிறது. அங்கும் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை, கோப்பாய் பிரதேச வைத்தியசாலை, சண்டிலிப்பாய் பிரதேச வைத்தியசாலைகளிலும் டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர் என தெரிவித்தார். 

அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில், பொது வைத்திய நிபுணர் ரி.பேரானந்தராஜா கருத்து தெரிவிக்கையில், 

இரண்டு நாட்களுக்கு குறைவாக காய்ச்சல் இருக்குமானால் நன்றாக ஓய்வெடுத்து நீராகராத்தை குடித்தால் நன்று.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்து தலையிடி, சத்தி,வயிற்றோட்டம், மூட்டு நோ போன்ற நோய் அறிகுறிகள் வந்தால் அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடுவது நல்லது.இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளர்கள், வேறு நோயுள்ளவர்கள், வீட்டில் பராமரிக்க ஆட்கள் இல்லாதவர்கள் நோய் நிலை ஏற்பட்டால் வைத்தியசாலையை நாட வேண்டும்.

குருதிப் பரிசோதனையில் வெண்கலங்களின் எண்ணிக்கை 5000ற்கு குறைவாகவும் குறுதிச்சிறுதட்டு எண்ணிக்கை 130000ற்கு குறைவடைந்தால் வைத்தியசாலையை நாடவேண்டும் என்றார். 

குறித்த ஊடக சந்திப்பில் , பொது வைத்திய நிபுணர் எஸ்.சிவன்சுதன் கருத்து தெரிவிக்கையில், 

இந்த காலப்பகுதியில் டெங்கு நோய்க்கு மேலதிகமாக வேறு நோய்களும் பரவுகிறது.உதாரணமாக சுவாச தொற்று நோய், உண்ணிக் காய்ச்சல் என்பன பரவுகிறது. காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் மருத்துவ ஆலோசனையை பெற்று என்ன வகையான தொற்று என்பதை கண்டறிந்து சிகிச்சையை பெறலாம்.

சிறுவர்களை அவதானமாக பார்க்கவேண்டும்.காய்ச்சல் ஏற்பட்டால் உடலில் நீர்ச்சத்து குறையாத வகையில் அதிகளவில் நீரைப் பருக வேண்டும். வளர்ந்தவர்கள் மணித்தியாலத்துக்கு ஒருமுறை 100 மில்லிலீற்றர் நீர் வரையில் பருக வேண்டும். சிறுநீர் போதுமான அளவு வெளியேறுகிறதா என்பதை பார்க்க வேண்டும்.தொடர்ச்சியாக காய்ச்சல் எற்பட்டு சிறுநீர் வெளியேறும் அளவு குறைபவர்கள், சத்தி வந்து நீர் அருந்த முடியாதவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறவேண்டும் என்றார்.

No comments