Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் ஆலயத்தில் இயந்திர தகடுகளை திருடிய குற்றத்தில் பூசகர் கைது!


 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் விக்கிரகங்களின் கீழிருந்த யந்திர தகடுகளை திருடி விற்று வந்த குற்றச்சாட்டில் ஆலய பூசகர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

ஊர்காவற்றுறை சுருவில் ஐயனார் கோவில் என அழைக்கப்படும்,  ஸ்ரீ பூர்ணா புஸ்கலாதேவி சமேத ஸ்ரீ அரிகரபுத்திர  ஐயனார் ஆலய மூல விக்கிரமான ஐயனார் விக்கிரம் , பரிவார மூர்த்திகளான பிள்ளையார் , முருகன் - வள்ளி தெய்வானை , நவக்கிரங்கள் , வைரவர் , நந்தி - பலி பீடம் , கொடி தம்ப பிள்ளையார் , சண்டேஸ்வரர் உள்ளிட்ட விக்கிரகங்களின் கீழ் இருந்த யந்திர தகடுகளை ஆலய பூசகர் திருடி விற்று வந்தார் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பூசகர் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதியே ஆலயத்திற்கு பூசாராக நியமிக்கப்பட்டார் என்றும் , தினமும் பூஜை வழிபாடுகளை செய்து வந்த போதிலும் , விக்கிரகங்களின் கீழ் வைக்கப்படும் யந்திர தகடுகளை , சந்தேகம் ஏற்படாதவாறு , விக்கிரகங்களை இருப்பிடத்தில் இருந்து கிளப்பி அவற்றினை திருடி வந்துள்ளார் எனவும் , அவ்வாறு திருடப்பட்ட யந்திரதடுகள் சுமார் 10 பவுண் எனவும் ஊரவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments