யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வன்முறை கும்பல் ஒன்று இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
வன்முறை கும்பல் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து , அக் கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சிறிய ரக வேன் ஒன்றில் வந்த வன்முறை கும்பல் ஒன்று,இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை சன நெரிசலான நேரம் காங்கேசன்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
அதன் போது, வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, வன்முறை கும்பல் தமது வேனில் தப்பி சென்றுள்ளனர்.
அதனை அடுத்து பொலிஸார் வேனை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும், கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.
தப்பிசென்ற வாகனத்தையும், வன்முறை கும்பலையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.
No comments