Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புலிகளின் சின்னம் அணிந்த ரி சேர்ட் அணிந்தமை - மகனின் விடுதலைக்கு உதவமாறு கோரிக்கை


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் சம்மந்தப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்தமையினால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் பெற்றோர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளனர்.

அதன்போது, அமைச்சரிடம் தங்களின் குடும்ப நிலையை எடுத்துக்கூறியதுடன், மகனின் விடுதலைக்கு உதவுமாறும் கேட்டனர். 

இந்நிலையில் உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு நிலமைகளை எடுத்துக்கூறினார். 

 இதனையடுத்து, குறித்த இளைஞனின் பெற்றோருக்கு நம்பிக்கையளித்த அமைச்சர், சஞ்சலமடைந்து தேவையற்ற பண விரயங்களை செய்யாமல் பொறுமையாக இருக்குமாறும் ஆறுதல் தெரிவித்து அனுப்பி வைத்தார். 

 கடந்த 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வில், கொடிகாமத்தை சேர்ந்த யூட் சுரேஸ்குமார் டனுஜன் (வயது - 23) என்ற இளைஞன் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படம் மற்றும் புலிச் சின்னம் ஆகியவை பொறிக்கப்பட்ட ரீசேர்ட் அணிந்திருந்தார். 

 இதனடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments