முல்லைத்தீவு நகரத்திற்குச் செல்லும் ஏ-35 வீதியின் வட்டுவாகல் பாலம் பாரியளவில் சேதமடைந்தள்ளது.
நீண்ட காலமாக எவ்வித புனரமைப்புக்களுமின்றி காணப்படும் இந்த பாலத்தின் மையப்பகுதியில் பாரிய சேதம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
தற்போது பெய்துவரும் மழை காரணமாக நீர் பாலத்தை மேவிச் செல்வதனால், பாலம் முழுவதுமாக உடைந்து விழும் சாத்தியம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தி பாலத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
படங்கள் :- நன்றி சிறி திவி (முல்லைத்தீவு)
No comments