Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்பு - வீடியோ இணைப்பு


கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ அங்கிகள் (Flak jacket) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விடுவிக்கப்பட்ட பகுதியில்,  காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்து , கிணற்றினை  இறைத்த போது . கிணற்றினுள் இருந்து பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

அது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவித்ததை அடுத்து இராணுவத்தினர் , தாம் அதனை அப்புறப்படுத்துவதாக கூறியுள்ளனர். 

அதனால் அவரது காணிக்குள் இராணுவ அங்கிகள் பெருமளவில்    குவிக்கப்பட்டுள்ளன.  

இவை யுத்தத்தில் ஈடுபடும் இராணுவத்தினர், தமது உயிரை பாதுகாத்து கொள்வதற்காக அணிந்து கொள்ளும் ஒருவகை கவச அங்கி என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments