யாழ்ப்பாணத்தில் போதையில் சாரத்தியம் செய்வோரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமையால் , பொலிஸாரின் கடமைக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
பண்டிகை காலத்தில் வாகன விபத்தினை தடுக்கும் நோக்குடன் , போதையில் சாரத்தியம் செய்வோர் , வீதி ஒழுங்குகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக பொலிஸார் 24 மணி நேரமும் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே பொலிஸார் வாகனங்களை நிறுத்தி சோதனையிடும் போது , பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை , போதைப்பொருளை எதிரான விசேட நடவடிக்கைகளிலும் பொலிஸார் ஈடுபட்டு வருவதனால் , சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணிக்கும் வாகனங்களை மறித்து சோதனையிடும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments