யாழ்ப்பாணத்தில் மாணவர்களுக்கு , போதை பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காடு பகுதியில் இளைஞன் ஒருவர் மாணவர்களுக்கு மாவா போதை பாக்கு விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்த இளைஞனை சோதனையிட்ட போது , அவரது உடமையில் இருந்து , சுமார் 07 கிலோ மாவா பாக்கினை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments