யாழ்ப்பாணம் , திருநெல்வேலி பகுதியில் மூவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் போதை பொருள் பாவனையில் சில இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் , 20 , 21 மற்றும் 23 வயதுடைய மூவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ஹெரோயின் மற்றும் மாவா பாக்கு என்பவை மீட்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments