யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும், விசேட நடவடிக்கையால் , வாள் வெட்டு , வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் சடுதியாக குறைந்துள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த தினங்களில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது நூற்றுக்கும் அதிகமானவர்கள் கைதாகியுள்ளனர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் மேற்கொள்ளப்படும் இந்த விசேட நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வந்த வாள் வெட்டு வன்முறை சம்பவங்கள் , திருட்டு , வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் சடுதியாக குறைந்துள்ளது. இந்த விசேட நடவடிக்கை எதிர்வரும் நாட்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.
No comments