யாழில். டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 09 மாத குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் தாவடி பகுதியை சேர்ந்த மதுரன் கிருத்தீஸ் என்ற குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
அதேவேளை கடந்த சனிக்கிழமை யாழ்,பல்கலைக்கழக மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமை ஏற்பட்டதன் காரணமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து செல்வதனால் யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக இரண்டு நோயாளர் விடுதி திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments