யாழ்ப்பாணத்தில் சுமார் 6 கிலோ ஆமை இறைச்சியுடன் ஒருவர், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாசையூர் பகுதியில் நபர் ஒருவர் ஆமை இறைச்சியுடன் நடமாடுவதாக பொலிஸ் புலனாய்பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து சோதனையிட்ட போது, அவரது உடமையில் இருந்து ஆமை இறைச்சி மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments