Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

யாழில் . சர்வதேச சதுரங்க போட்டி


யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது. குறித்த போட்டியானது எதிர்வரும் 12ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.  

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள செல்வா பலாஸில் நடைபெறும் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் , யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். 

இந்திய துணைத்தூதராக அதிகாரி ஸ்ரீ ராம் மகேஷ் ,இலங்கை சதுரங்க கழகத்தின் தலைவர் லக்ஸ்மன் விஜேசூரிய , ஞானம் பவுண்டேசனின் உப தலைவர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், 

"யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023" என்ற தலைப்பில், யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்படும் இந்த போட்டியில் 800க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

 சர்வதேச தரத்தில் நடத்தப்படும் சதுரங்க போட்டியில் 150 இற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசு கிடைக்கும் விதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. 

இதில் சகல வயது பிரிவிலும், இருபாலரும் கலந்து பரிசில்கள் பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த போட்டி சர்வதேச போட்டியாக அமைந்துள்ளதால், எமது பிரதேசத்தில் உள்ள சதுரங்க வீரர்கள் தங்களின் சர்வதேச தரத்தை கூட்டுவதற்கு இது, மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 









No comments