யாழ்ப்பாண மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
யாழ் மாவட்ட செயலர், அம்பலவாணர் சிவபாலசுந்தரனின், ஏற்பாட்டில்மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.
இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், மாவட்டத்தின் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், முப்படைகளின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் என பல்வேறுபட்ட துறைசார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
No comments