யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்த குற்றத்தில் மூவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் சந்தேக நபர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சில பொருட்களும் வாள் ஒன்றினையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் 10ம் திகதி புத்தூர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு சிசிடிவி கமரா, தொலைக்காட்சி, சிகரெட் பெட்டிகள், தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் என பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக உரிமையாளரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments