யாழில் கஞ்சா கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றத்தில் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , துன்னாலை கிழக்கை சேர்ந்த குறித்த பெண்ணை பொலிசார் கைது செய்ததுடன் , கைது செய்யப்பட்ட பெண்ணின் உடைமையில் இருந்து ஒரு தொகை கஞ்சா கலந்த மாவா பாக்கினை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments