யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலையை அகற்ற கோரி இன்றைய தினம் புதன்கிழமை காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உடுப்பிட்டி சந்தியில் நடைபெற்ற போராட்டத்தில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டனர். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் உடுப்பிட்டி பகுதியில் கடையடைப்பும் இடம்பெற்றது.
போராட்டத்தின் இறுதியில் பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்று ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கப்படவுள்ளதுடன் அதன் பிரதிகள் பல்வேறு தரப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
No comments