Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் டெங்கு ஒழிப்புக்கு இராணுவத்தினர் களமிறக்கம்


யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகம் காணப்படுகிற நான்கு பிரதேச செயலக பிரிவில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை பயன்படுத்தி டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் நகரம், நல்லூர், கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகளவானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்படி பகுதிகளில் டெங்கு நோய் பரவலை  கட்டுப்படுத்தும் வகையில்

வடமாகாண பிரதம செயலாளர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நான்கு பிரதேச செயலாளர் பிரிவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காதவர்களும் கடும் நடவடிக்கை எடுக்கவும் பணிக்கப்பட்டது.

சுகாதார திணைக்களம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், இராணுவம் ஆகியோரை குறித்த நடவடிக்கையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டது.

அது தவிர டெங்கு நோய் ஏற்படுகின்ற பகுதிகளில் காணப்படுகின்ற குப்பைகள் அகற்றப்பட வேண்டும்.

பொதுமக்கள் டெங்கு நோய் பரவும் பகுதிகளை இல்லாதொழிக்க சகல விதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். தங்கள் வீட்டு அயல் பகுதிகளில் காணப்படுகின்ற தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட வேண்டும்.  மற்றும் டெங்கு நோய் பரவும் நீர் தேங்கும் பாத்திரங்கள் மற்றும் ஏதாவது பொருட்கள் இருக்குமாயின் அவை தகுந்த முறையில் அகற்றப்பட வேண்டும் என சுகாதார தரப்புக்கள் வலியுறுத்தியுள்ளது.

No comments