யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரையும், பொலிஸ் பிணையில் பொலிஸார் விடுவித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்டு , யாழ். மாவட்ட செயலகத்தில் , யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதன் போது , மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் பொலிஸாரின் தடைகளை மீறி முன்னோக்கி செல்ல முற்பட்ட நிலையில் , அவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டு , அவர்களை பொலிஸ் பிணையில் போலீசார் விடுவித்துள்ளனர்.
No comments